பொம்மக்கோட்டைBommakottai

நம் பொம்மக்கோட்டைOur Bommakottai

பத்து திட்டங்கள். ஒரே கனவு — செழிப்பான, சமமான, ஸ்மார்ட் கிராமம். உங்கள் கருத்துடன் சேர்ந்து உருவாக்குவோம். Ten plans, one dream: a thriving, fair and smart village. We will shape every plan together with you.

ஏன் இந்த முயற்சி?Why this effort?

நம் ஊர் நமக்கு எல்லாம் தந்தது. இப்போது நாம் ஊருக்குத் திருப்பித் தரும் நேரம்.

கல்வி, வேலைவாய்ப்பு, சாலை, நீர், மின்சாரம், பாதுகாப்பு, பசுமை, ஆரோக்கியம் என நம் கிராமத்தின் ஒவ்வொரு தேவையையும் கவனித்து, பத்து திட்டங்களாக வகுத்துள்ளோம். வரும் உள்ளாட்சித் தேர்தலில் தகுதியான ஒருவரை மக்களின் ஆதரவுடன் நிறுத்தி, இவற்றை நிறைவேற்றுவதே நமது இலக்கு. இவற்றை நமது கிராமத்துக்கான வாக்குறுதிகளாகவும் வைத்துக் கொள்ளலாம்.

விரைவில் கள ஆய்வு நடத்தி, மக்களின் கருத்துக்களை அறிந்து, இத்திட்டங்களை விரிவுபடுத்தி ஒரு புத்தகமாக அச்சடித்து ஊரில் உள்ள ஒவ்வொருவருக்கும் வழங்குவோம்.

Our village gave us everything. Now it is our turn to give back.

We have looked at every need of Bommakottai, from education, jobs, roads and water to power, safety, greenery and health, and shaped them into ten plans. Our aim is to support a deserving candidate in the coming local body election, with the people behind them, and see these plans through. Think of them as our village's promises.

Soon we will run a field survey, hear from every household, expand these plans, and print them as a book for everyone in the village.

— பொம்மக்கோட்டை மக்கள்— The people of Bommakottai

பத்து திட்டங்கள்The ten plans

ஒரு படத்தைத் தொட்டால் அந்தத் திட்டத்தின் விளக்கம் கீழே வரும்.Tap a picture to read about that plan below.

    நம் ஏரியின் கனவுA vision for our lake

    வசந்த விநாயகர் கோயில் அருகே உள்ள நம் ஏரி — இன்று எப்படி உள்ளது, நாளை எப்படி மாறலாம். நடுவில் மியாவாக்கி குறுங்காடு, சுற்றிலும் சோலார் கூரையுடன் கூடிய நடைபாதை.Our lake beside the Vasantha Vinayagar temple, as it is today and as it could become: a Miyawaki forest at its heart, ringed by a walking path roofed with solar panels.

    இன்றைய ஏரி — செயற்கைக்கோள் படம் / The lake today, satellite view
    இன்றுToday
    மியாவாக்கி காடு மற்றும் சோலார் நடைபாதையுடன் ஏரி — கற்பனை வடிவமைப்பு / The lake with a Miyawaki forest and solar-roofed walking path, concept design
    நாளைTomorrow
    • மியாவாக்கி குறுங்காடு: ஏரியின் நடுவில் அடர்ந்த நாட்டு மரக்காடு — பறவைகளுக்கும் நிழலுக்கும்.Miyawaki forest: a dense native-tree forest in the middle of the lake, for birds and shade.
    • சோலார் நடைபாதை: ஏரியைச் சுற்றி நிழல் தரும் சோலார் கூரையுடன் நடக்கும் பாதை; அதே கூரை ஊருக்கு மின்சாரம் தரும்.Solar walkway: a shaded path around the lake whose solar roof also powers the village.
    • தூர் வாருதல்: ஏரியின் கொள்ளளவை உயர்த்தி நிலத்தடி நீரைப் பெருக்குதல்.Desilting: more water held, more groundwater recharged.

    இரண்டாவது படம் AI மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை வடிவமைப்பு. இறுதி வடிவம் கள ஆய்வு மற்றும் மக்கள் கருத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.The second image is an AI-generated concept. The final design will follow the field survey and the people's views.

    இத்திட்டங்களைச் செய்ய ஏது பணம்?Where will the money come from?

    இதற்கு மூன்று எளிய வழிகள் உள்ளன.There are three simple sources.

    நிதிGovernment funds

    மாநில, மத்திய அரசு நிதி மற்றும் கிராம வரி வருவாய்.State and central government funds, plus the village's own tax revenue.

    மானியங்கள்Subsidies

    சோலார் திட்டங்கள் போன்றவற்றுக்கு அரசு வழங்கும் சிறப்பு மானியங்கள்.Special government subsidies for schemes such as solar power.

    கொடைCSR and goodwill

    கார்ப்பரேட் நிறுவனங்களின் CSR நிதி, மற்றும் நம் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டு வெளிநாடுகளிலும் வெளியூர்களிலும் வாழ்ந்து உதவத் தயாராக இருக்கும் நல்ல உள்ளங்களின் ஆதரவு.Corporate CSR funds, and the support of kind-hearted people with roots in Bommakottai who now live in other towns and abroad.

    அடுத்த படிகள்The road ahead

    திட்டங்கள் இப்படி முன்னேறும்.How the plans move forward.

    1. கள ஆய்வுField surveyஒவ்வொரு வீதிக்கும் சென்று நிலைமையை நேரில் பார்த்தல்.Visiting every street to see conditions first-hand.
    2. மக்கள் கருத்துPeople's viewsஉங்கள் தேவைகளைக் கேட்டு, திட்டம் 9, 10-ஐ முடிவு செய்தல்.Listening to your needs and deciding plans 9 and 10.
    3. திட்டப் புத்தகம்Plan bookவிரிவான திட்டங்களை அச்சடித்து ஒவ்வொருவருக்கும் வழங்குதல்.Printing the detailed plans and giving a copy to everyone.
    4. உள்ளாட்சித் தேர்தல்Local body electionதகுதியான ஒருவரை மக்களின் ஆதரவுடன் நிறுத்துதல்.Fielding a deserving candidate with the people's support.
    5. செயல்படுத்துதல்Deliveryஒவ்வொரு திட்டத்தின் முன்னேற்றத்தையும் இந்தத் தளத்தில் வெளிப்படையாகப் பகிர்தல்.Sharing each plan's progress openly on this site.

    உங்கள் கருத்து முக்கியம்Your voice matters

    நம் ஊருக்கு என்ன தேவை? எழுதி அனுப்புங்கள் — அது வாட்ஸ்அப்பில் நேரடியாகச் செல்லும்.What does our village need? Write it here and it goes straight to WhatsApp.

    யோசனையை எழுதிய பின் கீழே உள்ள பொத்தானை அழுத்துங்கள்.Write your idea, then press the button below.